திருவள்ளுவருக்கு மைலாப்பூரில் கோயில் (பிறந்த இடம்) இருப்பதை தற்செயலாகக் கண்டேன். இது மைலாப்பூரில் உள்ள கச்சேரி தெருவிலிருந்து பிரியும், முண்டகண்ணியம்மன் ஆலய தெரு வழியாக சென்றால், அதன் தொடர்ச்சியாகத் திருவள்ளுவர் தெருவில் உள்ளது. இதுதான் திருவள்ளுவர் பிறந்த இடம் என்று அங்கே உள்ளவர்கள் கூறுகின்றனர். அங்கே திருவள்ளுவருக்கு சன்னதியும் அதில் கற்சிலையும் உள்ளது.
ஒரு சிறிய மண்டபத்தில் மேடை ஓன்று உள்ளது. இது தான் திருவள்ளுவர் அவதரித்த இடம் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. அந்த மேடை மீது கருங்கல்லில்லான இரு பாதங்கள் இருக்கின்றன. இதே போன்ற அடையாளத்தை (கருங்கல்லில்லான இரு பாதங்கள் ) நாகபட்டினத்திர்க்கும் வேளாங்கண்ணிக்கும் இடையில் உள்ள, கோர்கக்கர் சித்தர் ஆலயத்தில் உள்ள சித்தர் அவர்களின் சீவ சமாதி மீதும் உள்ளன, இந்த அடையாளங்கள் (பாதங்கள்) ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றாக என் மனதுக்குப்படுகிறது. தமிழரது பெருமையை உலகமெல்லாம் பரவ காரணமான திருவள்ளுவர் அவர்களை நினைக்கையில் பூரிப்பாக உள்ளது .
-சந்தரகுமார்