இயற்கை விவசாய மாம்பழம்


 
தமிழ்நாடு விவசாயிகளையே தங்களுடைய இயற்கை வேளாண் பண்ணை முலம் திரும்பி பார்க்கவைக்கும் சகோதரர்கள் பாரதி மற்றும் சரவணன்.
   திருவள்ளுர் அருகே நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தை மாம்பழங்களை அதிகளவில் செழிக்கவைத்து சாகுபடி செய்துள்ள விவசாயி பாரதியிடம் இயற்கை விவசாயம் குறித்த அலோசனைகளை பெற்றுக்கொள்ளாலம். திருவள்ளுரைச அடுத்த சேர்ந்த திருநின்றவூரைச் சேர்ந்தவர் பாரதி இவர் திருவாலங்காட்டை அடுத்த காவேரி ராசபுரத்தில் நூற்றுக்காணக்கான ஏக்கர் பரப்பளவில் மாங்காய், சப்போட்டா, நெல்லிக்காய் என பல்வேறு வகையான மரங்களை பயிரிட்டு வருகிறார்.  இவர் அனைத்து வகையான பயிர்களுக்கும் இயற்கை விவசாயத்தை மட்டுமெ நம்பி சாகுபடி செய்துள்ளார்.

உலக விசாய மாநாட்டிற்கு இஸ்ரேல் சென்ற போது எடுத்தபடம்

தற்போது அவரது தோப்பில் பொங்களுரா, செந்தூரா, அல்போன்சா, காலப்பாடி, இமாயத், மல்கோவா உள்ளிட்ட பல வகையான “மா” ரகங்களை சாகுபடி செய்துள்ளார். மேலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்குவார். விருப்பமுள்ள விவசாயிகள் 09940017635 / 09380533376 என்ற கைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். 
                                           -இரா.பிரசாத், ஆசிரியர் டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு