லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சிக்கியது.


   திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆர்.டி.ஓ சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சிக்கியது.

மேலும் பல முக்கிய ஆவணங்களும் கிடைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடியில் முறைகேடாக பணம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி முரளி தலைமையில் 2 இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், இது குறித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.