2050ல் பூமியில் பாதி காணாமல் போய்விடும் திகில் கிளப்பும் நிபுணர்கள் Pasumainayagan thagavalthalam        இப்போது உள்ள உயிரியல் சூழல் தொடர்ந்து வந்தால் 2050க்குள் பாதி உயிரினங்கள் பூமியிலிருந்து அழிந்து போய் விடும் என்று சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
2030ம் ஆண்டுக்குள் நாம் 80 சதவீத எரிபொருள் சேவையை புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் மூலத்திற்கு மாற்றி விட வேண்டும். இப்போதிருந்தே இயற்கையைக் காக்கும் வேலையைத் தொடங்கி விட வேண்டும். அப்போதுதான் பூமி தப்பும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இன்னும் 33 வருடங்களில் பூமியிலிருந்து 8 லட்சம் உயிரினங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்று சூழலியல் நிபுணர் ரீஸ் ஹால்டர் கூறியுள்ளார்.
Thagavalthalam Pasumai nayagan

மோசமான நிலையில் பூமி...
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், "மனிதர்கள் பூமியை மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு போய் விட்டனர். தற்போது நாம் புதிய பூகோள உலகுக்குள் நுழைந்துள்ளோம். இன்னும் பல கோடி ஆண்டுகளில் பூமி ஒரு பாறை போல மாறி விடும். இங்கு தாவரங்களும், உயிரினங்களும் பாசில்கள் போல மாறி விடும். இதை மாற்ற நாம் மிகப் பெரிய அளவில் இயற்கைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இனிமேல் வரும் காலத்தில் காலநிலை சரியான முறையில் இருக்காது. வெயில் காலத்தில் மழை வரலாம், மழைக் காலத்தில் வெயில் அடிக்கலாம். இதை மாற்ற முடியாது. இதற்குக் காரணம், நாம் அதிக அளவிலான கரியமில வாயுவை வெளியேற்றி வருவதால்தான். உணவுப் பாதுகாப்பும் இனி கேள்விக்குறியாகி விடும்

Pasumai nayaganThagavalthalam


அழிந்து வரும் உயிரினங்கள்...

நமது பூமியைச் சேர்ந்த பல உயிரினங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன. கடந்த 65 மில்லியன் ஆண்டுகளில் நாம் பல ஆயிரம் உயிரினங்களை இழந்துள்ளோம். இது தொடர்கிறது.

33 ஆண்டுகளில்...

இதே வேகத்தில் போனால் அடுத்த 33 ஆண்டுகளில் நாம் 8 லட்சம் உயிரினங்களை இழக்க நேரிடும். அல்லது பூமியில் பாதி உயிரினங்கள் அழிந்து போகும் அபாயமும் உள்ளது. இதை சரி செய்ய வேண்டுமனால் நாம் இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்.

Pasumai nayaganThagavalthalam


இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்...

இப்போதிருந்தே இயற்கையைக் காப்பாற்ற வேண்டும். புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் மூலங்களுக்கு நாம் மாற வேண்டும். ஆனால் அதைத் தீவிரமாக செய்யத் தேவையான அரசியல் துணிச்சல் நம்முடைய எந்த நாட்டிலும் இல்லை..
ஆனால் பூமி தப்ப வேண்டுமானால், நாம் பிழைக்க வேண்டுமானால், உயிரினங்கள் அழியாமல் இருக்க வேண்டுமானால் நாம் இதைத் செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
Pasumai Nayagan பசுமைநாயகன் Thagavalthalam

இனி வரும் காலத்தில் பூமியில் வெப்ப நிலை அதிகரிக்கும். ஏற்கனவே அது வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது எல்லாமே விஷத்தன்மையாக மாறி விட்டது. உலகில் எங்கு பார்த்தாலும் ஆரோக்கியம் இல்லை. விஷத்தன்மைதான் மிகுந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.                           

                            
                                   Source: tamil.oneindia.com

திருவள்ளூர் மாவட்டம் , பூவிருந்தவல்லி நகராட்சியில் ,50.000 மரக்கன்றுகள் நடும் விழா

Pasumainayagan பசுமை நாயகன்
Pasumainayagan பசுமை நாயகன்
Pasumainayagan பசுமை நாயகன்
Pasumainayagan பசுமை நாயகன்
Pasumainayagan பசுமை நாயகன்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவா ராவ்  பூவிருந்தவல்லி
நகராட்சியில் 50.000 மரக்கன்றுகள்  நடும்  விழாவை துவக்கி வைத்தார் 

இயற்கை ஆன்டிபயாடிக்

thagavalthalam Antibiotic


     ஆன்டிபயாடிக் என்பது நமது உடலில் ஆன்டிபாடி என்ற நோய் எதிர்ப்பு செல்கள் குறையும்போது, தரப்படும் மருந்து. இது நோய் எதிர்ப்பு செல்களுக்கு பதிலாக உபயோகப்படுத்தப்படும் ஒரு சப்ஸ்டிடியூட்.
ஆனால் ஆன்டிபயாடிக் உடலுக்கு நல்லதல்ல. தொடர்ந்து ஆன்டிபயாடிக் உபயோகித்தால் சிறு நீரகம், கல்லீரலுக்கு பக்க விளைவுகளை தரும். ஆகவே கூடுமானவரை உங்கள் இயற்கையான நோய் எதிர்ப்பு செல்களை தூண்டி விட ஊக்கப்படுத்துங்கள்.
நமது இயற்கை மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டிவிடும் எண்ணற்ற மருந்துகள் இருக்கிறது. துளசி, மஞ்சள், மிளகு, சுக்கு, இஞ்சி மற்றும் பூமியில் மிகச் சாதரணமாக விளையும் பல மூலிகைகள் பல அரிய மருத்துவ குணங்களை பெற்றுள்ளன.

நாம் உபயோகிக்கும் முறையில் இந்த மூலிகைகளை உபயோகித்தால் பலன் நிச்சயம். உங்களுக்கான இயற்கை ஆன்டிபயாடிக் இங்கே கூறப்பட்டுள்ளது.
இயற்கை ஆன்டிபயாடிக் தயாரிக்கும் முறை 
தேவையானவை :
       ஆப்பிள் சைடர் வினிகர் -700மி.லி, பூண்டு அறிந்தது- கால்கப்,  வெங்காயம் - கால் கப், மிளகு - 2 , இஞ்சி துருவியது - கால் கப், குதிரை முள்ளங்கி - 2 டேபிள், மஞ்சள் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை -1 
         முதலில் ஆப்பிள் சைடர் வினிகர் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிகட்டி, ஒரு குடுவையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மிக நன்றாக குலுக்குங்கள்.
செய்முறை -2 
பின்னர் இந்த கலவையை ஒரு வெளிச்சம் பூகாத இருளான இடத்தில் வைத்துவிடுங்கள். 2-6 வாரங்கள் வரை வைக்கவும். அதன் பின் வடிகட்டி அதனை தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.
உபயோகிக்கும் அளவு : 
நோய்வாய்ப்படும்போது இந்த மருந்தை ஒரு ஸ்பூன் குடித்தால் உங்கள்காய்ச்சல் இருமல் சளி போன்ர நோய்கள் குணமாகி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குறிப்பு : 
இது மிகவும் சக்தி வாய்ந்த மருந்தாகும். மிகவும் காரத்தன்மை இருப்பதால் உபயோகிக்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகி பின் குடிக்கவும். மற்றபடி இது உங்களுக்கு எந்த வித பக்கவிளைவுகளை தராது. உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சிக்கியது.


   திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆர்.டி.ஓ சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சிக்கியது.

மேலும் பல முக்கிய ஆவணங்களும் கிடைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடியில் முறைகேடாக பணம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி முரளி தலைமையில் 2 இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், இது குறித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

   திருவள்ளூர் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை தனிப்படை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
மாவட்ட கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து கடந்த 20 நாட்களாக கண்காணிக்கப்பட்டு வந்தது.  நேற்று நள்ளிரவு இரண்டரை மணியளவில்  குந்தாலி மேட்டில் தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது ஒரு தோப்பின் கிடங்கில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த சுமார் 30 டன் அளவிலான செம்மரக் கட்டைகளை தனிப்படை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து  அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் கிடங்கு உரிமையாளரான சீனிவாசனை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட செம்மரக் கட்டைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டது.  இதன் மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய் இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்த கட்டைகள் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது.  இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

     கொசுவால் பரவும் நோய்களை தடுக்க திருவள்ளூரில் நகராட்சி சார்பில் 17 தினங்களாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
   டெங்கு உள்ளிட்ட கொசுவால் நோய் பரவி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள   நோயாளிகளின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் சுகாதாரம் நிலை குறித்து அறிய மூன்று குழுக்களை நகராட்சி நியமித்துள்ளது. அந்த பகுதிகளில் நோய் மேலும் பரவாமல் தடுக்க இந்த குழுக்கள் சுகாதார பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு மருத்துவர்களின் உதவியுடன் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
                                                                      
                  -இணைய செய்தியாளர்-சந்தரகுமார்                                                               

டயர் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

      திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை பகுதியில் டயர் கம்பெனி கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் வட மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் தரக்கோரி 5,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையை அடுத்துள்ள தேர்வாய் கண்டிகையில் சிப்காட் தொழிற் பூங்கா உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு, மிசிலின் என்ற ஜெர்மனிய தொழில் நுட்பத்துடன் கூடிய தனியார் டயர் தொழிற்சாலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டுமானப் பணியின்போது நேற்று திடீரென கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், கட்டட இடிபாடுகளில் சிக்கி, ஒடிசாவைச் சேர்ந்த கோகுல பால என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும், உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல் துறை மற்றும் அரசு உயரதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். எனினும் தொழிலாளர்களின் போராட்டத்தை அடுத்து அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.